அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜோ பைடன் பெற்ற வெற்றியை செல்லுபடியற்றது என அறிவிக்கக் கோரி ஜனாதிபதி ட்ரம்ப், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட போதும், அவரது வெற்றியை ஏற்றுக் கொள்ள, குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ட்ரம்ப் மறுத்து வருகிறார்.
இந்த நிலையில், ஜோர்ஜியா, மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் உள்ளிட்ட நான்கு மாகாணங்களில், ஜோ பைடன் பெற்ற வெற்றியை செல்லுபடியற்றதாக அறிவிக்கக் கோரி, டெக்சாஸ் மாகாண சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
இதையடுத்து, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், இதே வழக்கில் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். அவருடன், 17 மாகாணங்களைச் சேர்ந்த, குடியரசு கட்சியின் சட்டமா அதிபர்களும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.





