தனிமைப்படுத்தல் செயல்முறைகளை மீறுவோருக்கு நீதிமன்றத்தினால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும் என்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது, 25 ஆயிரத்து 114 குடும்பங்களைச் சேர்ந்த, 95 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில் கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 14 ஆயிரத்து 332 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.