மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் துணைக் கொரோனா கொத்தணிகள் உருவாகும் ஆபத்து இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல் மாகாணத்துக்கு வெளியே உள்ள பகுதிகளில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் மூலங்களில் இருந்து, இந்த ஆபத்தை உணர முடிந்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.