நடிகர் ரஜினிகாந்தின் புதிய கட்சியின் பெயர் இன்று பதிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக, மன்ற நிர்வாகிகள் சிலர் சட்டத்தரணிகளுடன் புதுடில்லி சென்றுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன், ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி, கட்சியின் பெயரைத் செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
புதிய கட்சியின் பெயர் இன்று, டில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படும் என்றும், கூறப்படுகிறது.
எனினும், புதிய கட்சியின் பெயர் விபரங்கள் வரும் 31ஆம் திகதியே வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





