மேற்கு வங்கத்தில் பாஜ.க தேசிய தலைவர் நட்டாவின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஒரு நாடகம் என்று, மாநில முதல்வர் மம்தா பனர்ஜி தெரிவித்துள்ளார்.
நட்டா மற்றம் அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது நேற்று சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதலுக்கு திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தான் பொறுப்பு என்று பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள மேங்குவங்க முதல்வர் மம்தா பனர்ஜி, தமது பேரணிக்குக் கூட்டம் சேரவில்லை என்பதால் அதை திசைத்திருப்பவே பாஜகவினர் நாடகமாடுகிறார்கள் என்ற கூறியுள்ளார்.
நட்டாவுக்கு மத்திய அரசின் படைகள் பாதுகாப்பு வழங்கி வரும் நிலையில், அவர்களால் பாஜக தலைவரைப் பாதுகாக்க முடியாமல் போனது எப்படி என்றும், அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.