தமிழகத்தில் இந்த மாதம் பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மார்ச் மாதம் மூடப்பட்ட பாடசாலைகள் இன்னும் திறக்கப்படவில்லை.
கொரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ளதால் பாடசாலைகள் திறக்கப்படலாம் என்ற கருத்து நிலவி வருகின்ற நிலையில், தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
‘‘பாடசாலைகள் இந்த மாதத்தில் திறக்கப்படுவது சாத்தியமில்லை.
அவற்றைத் திறப்பது குறித்து முதலமைச்சருடன் பேசி முடிவு எடுப்போம்’’ என்றும் செங்கோட்டையன் மேலும் தெரிவித்துள்ளார்.