போர் குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறும், சிறிலங்காவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்குமாறும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிங்கள இணையத்தளம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் நடந்த போர்க்குற்றங்களுக்கு சாட்சியங்கள் இருப்பதாகவும், போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உயர் பதவிகளில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறந்து போன தமது உறவினர்களை தமிழ் மக்கள் நினைவு கூர சிறிலங்கா அரசாங்கம் இடமளிப்பதில்லை என்றும் கூறியுள்ள ரட்ணஜீவன் ஹூல், ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார் என்றும், சிங்கள இணையத்தளம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.