இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் மொடேர்னா (Moderna) நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி அளிக்க முடியும் என்று கனடிய சுகாதார அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
கனடா சுகாதார அமைச்சுக்கு இந்தப் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கனடாவில் பைசர் – பயோ என் ரெக் (Pfizer-BioNTech) கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதற்கு புதன்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்தே, அமெரிக்காவின் மொடேர்னா (Moderna) நிறுவனத்தின், தடுப்பு மருந்துக்கும் அனுமதி அளிக்கலாம் என்று சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.