ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதால் திமுக-வுக்குத் தான் ஆபத்து என்று, பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
‘‘திமுக-வில் ரஜினி காந்த் ரசிகர்கள் அதிகம் உள்ளனர், ரஜினி கட்சி தொடங்குவதால் திமுக-வுக்குதான் ஆபத்து.
அமித் ஷா வருகையால், ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை. சுயமாக சிந்தித்து கட்சி தொடங்குவதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை, 2ஜி தீர்ப்பு விரைவில் வரஉள்ளது. ஆ.ராசா ஜனவரி 31 ஆம் திகதி வரை தான் பேச முடியும்’’ என்றும் ஹெச். ராஜா மேலும் கூறியுள்ளார்.