அடுத்த இரண்டு வாரங்கள் கணிசமான வியாபாரம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் ரொரண்டோ வியாபாரிகள் இருப்பதாக கூறுகின்றனர்.
தற்போது ரொரண்டோவில் அமுலாக்கப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளால் சில்லறை வியாபாரம் கணிசமாக பதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் வழமைக்கு மாறாக இம்முறை இணைவழி ஊடாக வியாபரத்திற்கு அதிகளவான சில்லறை வியாபரிகள் மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும். தற்போதைய நிலையில் இன்னமும் சுமூகமான நிலைமகள் காணப்படாததன் காரணத்தினால் பண்டிகை வியாபார செயற்பாடுகள் எவ்வளவு தூரம் மேலோங்கும் என்பது கணிப்பிட முடியாதவொன்றாக உள்ளதாகவும் ரொரண்டோ தகவல்கள் கூறியுள்ளன.