ஓரினச் சேர்க்கை குற்றமாகக் கருதப்பட்டு வந்த பூட்டானில், அதன் மீதான தடையை நீக்க மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஓரினச் சேர்க்கைக்கு அனுமதியளிப்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில் 69 பேரில் 66 பேர் ஓரினச் சேர்க்கை சட்டமூலத்துக்கு ஆதரவளித்தனர். இதையடுத்து தடையை நீக்க பூட்டான் அரசு முன்வந்துள்ளது. மேலும் பூட்டான் மன்னரின் ஒப்புதலுக்காக சட்டமூலம் காத்துள்ளது.
பூட்டான் மன்னர் ஒப்புதல் அளித்ததும் ஓரினச் சேர்க்கை சட்டத்துக்கு அனுமதியளித்து அமுலுக்கு வரும் என பூட்டான் அரசு தெரிவித்துள்ளது