துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள, சிரிய நகரத்தில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் ரஸ் அல்-அன் நகரில் உள்ள சோதனைச் சாவடியை குறிவைத்து இன்று கார் குண்டுதாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 16 உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 11 பேர் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் என்றும், 3 பேர் துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், ஏனைய 2 பேரும் உள்ளூர் பொதுமக்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு குர்திஷ் போராளிகளே காரணம் என துருக்கி குற்றஞ்சாட்டியுள்ளது.