சிறிலங்கா சனத்தொகையில் 10 சதவீதமானவர்களுக்கு கொரோனா தொற்று ஒழிப்பிற்கான தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.
மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கு ஒரு பில்லியன் தடுப்பூசிகளை வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ், சுகாதார ஸ்தாபனத்தால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த செயற்றிட்டத்திற்கு தயாராகுமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் , விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.
தடுப்பூசி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கைக்கு எப்போது அவை விநியோகிக்கப்படும் என எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அவர் கூறினார்.