உத்தரபிரதேச மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவர் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மற்றும் அவரது நண்பர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உத்தரபிரதேச த்தில் பால்ராம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகேஷ் சிங் லக்னோவை தலையிடமாக கொண்ட ராஷ்ட்ரிய சுவாரப் என்ற ஹிந்தி பத்திரிகையில் பணியாற்றி வந்தார்.இவரது நண்பர் பிந்து சாகு அவருடன் தங்கி இருந்தார்.
கடந்த வாரம் இவர்கள் இருவரும் வீட்டில் தீப்பிடித்து உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர். அனால் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.