பைசர் – பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அவசர ஒப்புதல் அளிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கும் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
சுயாதீன விஞ்ஞான வல்லுநர்கள், தொற்று நோய் மருத்துவர்கள் மற்றும் புள்ளியியல் வல்லுநர்களைக் கொண்ட அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் தடுப்பூசி ஆலோசனைக் குழு, தடுப்பூசியின் நன்மை பாதக விளைவுகள் குறித்து கூடி ஆராய்ந்த பின்னர் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது.
இந்நிலையில் தடுப்பூசிக்கு முழுமையான ஒப்புதல் அளித்த 24 மணி நேரத்திற்குள் தடுப்பூசி விநியோகம் தொடங்கும் என்று மத்திய அரசின் தடுப்பூசி விநியோக திட்டமான தெரிவித்துள்ளது. பைசர் தடுப்பூசி ஏற்கனவே இங்கிலாந்து, கனடா, பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியாவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.