நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் மருத்துவர்கள் தங்களை குழந்தையை பார்ப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என கொரோனாவால் உயிரிழந்த 20 நாள் குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் உயிரிழந்த கைக்குழந்தையின் பெற்றோர் உடலத்தை பொறுப்பேற்பதற்கு மறுத்தனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதை அவர் நிராகரித்துள்ளார்.
பெற்றோர்களின் அனுமதியின்றி குழந்தையின் உடலை தகனம் செய்ய எவ்வாறு தகனம் செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்கள் குழந்தையை பார்ப்பதற்கு அனுமதிக்காத மருத்துவர்கள் தாங்கள் ஆவணமொன்றில் கைச்சாத்திடவேண்டும் மருத்துவர்கள் வற்புறுத்தினார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.