மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடம் கொட்டகலையில் ஒதுக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும், மலையக புத்திஜீவிகளுடன் கலந்துரையாடி, பாடத்திட்டங்கள் தொடர்பிலும் முடிவெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலவாக்கலை, வட்டகொடையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையால்தான் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது என்றாலும், பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. ஆயிரம் ரூபாயை விட அதிக சம்பளம் கிடைக்கவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.
இந்த கூட்டுஒப்பந்த முறையில் புதிய வகையில் விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். குறித்த முறையில் குறைப்பாடுகள் உள்ளன என்பதை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்கூட ஏற்றுக்கொண்டுள்ளனர். அது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்