தற்போதைய கல்விப்பருகாலம் நிறைவடைந்து இந்த ஆண்டில் விடுமுறைக்கு வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு ஒன்றாரியோ மாணவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு தனிமைப்படுத்துமாறு சுகாதார மருத்துவ அதிகாரி எலைன் டி வில்லா கேட்டுக்கொண்டுள்ளார்.
விடுமுறை பயணம் என்று வரும்போது, மாணவர்கள் ஒரு விதிவிலக்கு. இந்த விடுமுறை நாட்களில் தங்குமிடங்களை மூடுவதால் நிறைய மாணவர்கள் வீட்டிற்கு பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.
இருப்பினும், அடுத்த சில வாரங்களில் மாணவர்கள் தங்கள் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் இன்னும் உள்ளன.
அந்தச் சூழ்நிலைகளில் செய்யக்கூடிய பாதுகாப்பான விடயம், அவர்களைப் பொறுத்தவரை, தனிமைப்படுத்துவதும், வீட்டிற்கு வருவதற்கு முன்பு முடிந்தவரை சுயமாக தனிமைப்படுத்துவதும் ஆகும் என்று மேலும் தெரிவித்தார்.