ரஷ்யாவில் பாதுகாப்பு படையினரின் சுற்றிவளைப்பின் போது, பயங்கரவாதி ஒருவர், குண்டை வெடிக்க வைத்து உயிரிழந்துள்ளார்.
ரஷ்யாவின் வடக்கு கராசே ( Karachay) மாகாணத்தில் கிராமம் ஒன்றில், ஒரு வீட்டில் பயங்கரவாதி பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, விரைந்து சென்ற ரஷ்ய பாதுகாப்பு படையினர் அந்த வீட்டை சுற்றிவளைத்து உள்ளே நுழைந்தபோது, அங்கிருந்த பயங்கரவாதி ஒருவர், தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் ரஷ்ய பாதுகாப்பு படையினர் 6 பேர் காயமடைந்தனர். குண்டை வெடிக்கச் செய்த பயங்கரவாதி உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.
இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் குறித்து ரஷ்ய பாதுகாப்பு படையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.