நாட்டில் விவசாயிகளின் வருமானத்தை பிகார் விவசாயிகளின் வருமானம் அளவுக்கு குறைப்பதற்கு மத்திய அரசு விரும்புவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றில், இந்திய விவசாய குடும்பங்களின் வருவாய் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், இந்தியாவில் ஒரு விவசாய குடும்பத்தின் சராசரி ஆண்டு வருமானம் 77 ஆயிரத்து 124 ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக, ஒரு பஞ்சாப் விவசாய குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2 இலட்சத்து 16 ஆயிரத்து 708 ரூபாவாகவும் குறைந்தபட்சமாக, பிகாரைச் சோ்ந்த ஒரு விவசாய குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2 ஆயிரத்து 684 ரூபாவாகவும் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையிலேயே ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.