டெஸ்ட் கிரிக்கெட் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி அடுத்த மாதம் சிறிலங்காவுக்குச் செல்லவுள்ளது
இதனை சிறிலங்காகிரிக்கெட் நிறுவனம் உறுதி செய்தது.
இந்தத் தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்தது. அதற்காக இங்கிலாந்து அணி சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த போதும், நாட்டில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக தொடர் பிற்போடப்பட்டு இங்கிலாந்து அணி திரும்பிச் சென்றது.
தற்போது உலகளாவிய ரீதியில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், சிறிலங்கா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரையும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கையை எதிர்த்தாடவுள்ளது.
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிகளும் டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.