அமெரிக்காவில் பைசர் / பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட பின்னர் நாளை, முதல் பொது மக்கள் பயன்பாட்டுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசியின் முதல் மூன்று மில்லியன் இந்த வார இறுதியில் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்படும் என்று விநியோகத்தை மேற்பார்வையிடும் ஜெனரல் குஸ்டாவ் பெர்னா (Gustav Berna) கூறினார்.
இந்த தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 95 சதவீதம் வரை பாதுகாப்பை வழங்குகிறது, என்பதால் உணவு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினால் பாதுகாப்பாக கருதப்பட்டது.