ஆல்பேர்ட்டாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 590பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதோடு 13 மரணங்களும் சம்பவித்துள்ளதாக பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கியூபெக்கில் ஆயிரத்து 895பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. அத்துடன் 14 மரணங்களும் இங்கு சம்பவித்துள்ளன. மேலும், ஒன்ராரியோவில் ஆயிரத்து 873பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதோடு, 17 மரணங்கள் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.