ஒன்ராரியோவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்தியர் மைக்கல் க்ரோன் (Michael Garron) மருத்துவமனையின் மருத்துவ கவனிப்பு மருத்துவ இயக்குனர் வைத்தியர் மைக்கல் வோர்னர் (Michael Warner) தெரிவித்துள்ளார்.
தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவின் அறையொன்றில் 250இற்கும் மேற்பட்டவர்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஆகவே, ஒன்ராரியோவில் தொடாச்சியான முடக்கலை பின்பற்றுவதன் ஊடாக கொரோனா தொற்றைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
எதிர்வரும் நாட்களில் இந்த விடயம் சம்பந்தமான மேலதிக முடிவுகளுக்குச் செல்ல முடியும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.