கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக தயாரிக்கப்பட்ட மூன்று தடுப்பு மருந்துகளுக்கு எதிர்வரும் வாரங்களில் அனுமதியளிக்கப்படவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் பைசர் (Pfizer), மொடனா(Modana) மற்றும் அஸ்ட்ரா செனெக்கா (Astra Seneca) போன்ற தடுப்பு மருந்து வகைகளுக்கு அனுமதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த மருந்துகளின் இறுதிக்கட்ட அறிக்கைகளை உலக சுகாதர ஸ்தாபனம் தற்போது அவதானத்திற்கு உட்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.