சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக, மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர், மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
எனினும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், சிறிலங்கா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக, கடெற் அதிகாரிகளின் தளபதியாக தற்போது பதவி வகிக்கும் மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க இந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.