சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வெசாக் நிகழ்வுகள் நயினாதீவில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமன்ய மகா நிக்காயவின் மகாநாயக்கர் மாகுலேவெவ விமல தேரரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே, பௌத்த சாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்த்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சில அரசியல்வாதிகளின் தடைகளால், இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை முன்னேற்றுவதில் தோல்வி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.