புவி வெப்பமடைவதைத் தடுக்காவிட்டால் இந்த நூற்றாண்டில் பேரழிவு நிலையை நோக்கி உலகம் செல்லும் என்று ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.
பருவ நிலை தொடர்பான உச்சிமாநாட்டின் அறிக்கையை ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியா குட்ரஸ் (Antonio Guterres) வெளியிட்டார்.
அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பேரழிவு தரும் புவி வெப்பமடைதலைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு நாடும் பருவநிலை அவசர நிலையை அறிவிக்க வேண்டும் என்று உலகத் தலைவர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் புவி வெப்பமடைவதைத் தடுக்காவிட்டால் இந்த நூற்றாண்டில் வெப்பநிலை 3 பாகை செல்ஷியஸ் வரை அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.