அமெரிக்காவில் அவசர தேவைகளுக்கு பைசர் (Pfizer) தடுப்பூசி மருந்தை பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கழகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் பைசர் (Pfizer) நிறுவனம் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக் (BioNtec) இணைந்து பைசர் (Pfizer) என்ற கொரோனா தடுப்பூசியை உருவாக்கின.
இந்த தடுப்பூசி இங்கிலாந்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், பைசர் தடுப்பூசியை அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கழகமும் அங்கீகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் பைசர் தடுப்பூசி மருந்தை பயன்படுத்துவதற்கு ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.