யாழ்ப்பாணம், மருதனார் மடம் சந்தை வியாபாரியுடன் தொடர்புடைய ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர், த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மருதனார் மடம் சந்தையில் 394 பேரிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவ்வாறு ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் போதுமான கூறுகள் இல்லாமையால் அவர்களிடம் மீளவும் மாதிரிகள் பெறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஏழாக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, யாழ். மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகளில் 136 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அவற்றின் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை நாளையே வெளிவரும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.