மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கான முன்மொழிவு ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் என்று, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
புதிதாக பதவியேற்ற தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சில நாட்களுக்கு முன்னர் சந்தித்த போது, மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கான ஒழுங்குகளை செய்யுமாறு அவர் வலியுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.