டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தீவிரவாதத் தாக்குதல் நடத்த பெண் தீவிரவாதிகள் குழு, தயாராகி வருவதாக மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மலேசியாவின் மதப்பிரச்சாகரான ஜாகிர் நாயக்குடன் தொடர்புடைய பணப்பரிவர்த்தனைகள் ஆராயப்பட்டபோது, தீவிரவாதிகளுக்குப் பணம் கைமாறியதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இந்தியாவில் தாக்குதல் நடத்தவே இந்தப் பணம் கைமாற்றப்பட்டதாகவும் பெண் தலைமையிலான தீவிரவாதக் குழு, தாக்குதலை நடத்த மியான்மரில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த தகவலை தொடர்ந்து டெல்லி, அயோத்தி உள்ளிட்ட நகரங்களிலும் ஹரியானா, பீகார் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன