பைசர் மற்றும் பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசிக் கொள்வனவுக்கு மேலதிகமாக, மொடோனாவிடமிருந்தும் கொரோனா தடுப்பூசியைப் பெறுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருதாக கொள்முதல் அமைச்சர் அனித்தா ஆனந்த் தெரிவித்தார்.
அத்துடன் அந்த தடுப்பூசி நிறுவனத்துடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் மொடோனா விநியோகத்தர்கள் தொடர்பிலும், கவனம் செலுத்தி வருவதோடு, உரிய அறிக்கைகளைப் பெற்றதன் பின்னர் அது தொடர்பான இறுதி முடிவுகளை எடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.