போர்மியூலா வன் (Formula 1) காரோட்டத்தில் நடப்பு உலக சம்பியனான பிரித்தானியாவின் லுவிஸ் ஹமில்டனுக்கு (Lewis Hamilton) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பின்புலத்தில் லுவிஸ் ஹமில்ட்டன் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள Formula 1 காரோட்டத்தின் Sakhir Grand Prix இல் லுவிஸ் ஹமில்டன் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லூவிஸ் ஹமில்டன் Formula 1 காரோட்டத்தில் 6 தடவைகள் உலக சம்பியனாகியுள்ளதுடன் நடப்பு சம்பியனாகவும் திகழ்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.