தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான புளொட்டும், ரெலோவும், புதிய அரசியலமைப்பிற்கு கூட்டமைப்பால் தற்போது சமர்ப்பிக்கப்படவுள்ள முன்மொழிவு எவ்வாறு அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.
இனப்பிரச்சினைக்கான தீர்வாக ‘பிரிக்க முடியாததும், பிளவு படுத்தப்பட முடியாததுமான ஐக்கிய இலங்கையில், தமிழர்களின் தயாகமான இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டிக் கோட்பாட்டின் அடிப்படையிலான சுயநிர்ணயத்துடன் கூடியதான அதியுச்சமான அதிகாரப்பகிர்வு” மேற்கொள்ளப்படவேண்டும் என்பது நேரடியாகவே வலியுறுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளன.
இந்த விடயத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடத்தில்நேரடியாகவே தெரிவித்துள்ளதாகவும் அவை குறிப்பிட்டுள்ளன.
ஒருவேளை ‘சமஷ்டி’ பதம் காணப்படாத பட்சத்தில் தனித்து முன்மொழிவுகளைச் செய்வதற்கு தயங்கப்போவதில்லை என்றும் அவை எச்சரித்துள்ளன.