சிறிலங்காவில் இன்று மட்டும் 650 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 785 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இன்னும் எட்டாயிரத்து 833 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 152ஆக அதிகரித்துள்ளது.