நைஜீரியாவில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான பாடசாலையில் இருந்த 400 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கட்சினா (Katsina ) மாகாணத்தில், 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் ஆண்கள் பாடசாலையில் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் பீதியடைந்த மாணவர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள தப்பியோடியுள்ளனர்.
இதையடுத்து காணாமல் போயுள்ள 400 மாணவர்களை பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர், இணைந்து பாடசாலைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.