தற்போதைய நிலைமையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைந்து நடத்துவதாக இருந்தால் பழைய முறையிலேயே அதனை முன்னெடுக்க முடியும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
அத்துடன், தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மாணாசபைத் திருத்தச்சட்டத்தின் பிரகாரம் தேர்தலை நடத்துவதாக இருந்தால் மேலும் சில வருடங்கள் தேவைப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நிறைவேற்றுத்துறையான நாடாளுமன்றத்திடமே காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
நிலைமைகள் இவ்வாறிருக்க, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணைக்குழுவிடத்தில் மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.