பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த, பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டா, இம்மாத இறுதியில் தமிழகத்துக்கும் பயணம் செய்யவிருந்தார்.
இந்த நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள நட்டா, தனக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதால் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பதிவிட்டுள்ளார்.