பி.சி.ஆர். சோதனையின் போது தவறான தகவல்களை கொடுப்பவர்கள் அல்லது பி.சி.ஆர். சோதனையில் இருந்து தப்பிக்க முனைபவர்களுக்கு எதிராக குற்றவியல் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோகண எச்சரித்துள்ளார்.
பி.சி.ஆர். சோதனையில் இருந்து தப்பிப்பவர்கள், ஏனையவர்களுக்கு வைரசை பரப்பிய தேசத் துரோகிகளாக கருதப்பட்டு அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிலர் பி.சி.ஆர். சோதனையின் போது தவறான தகவல்களைக் கொடுக்கின்றனர் என்றும், இது ஆள்மாறாட்டம் செய்த குற்றச் செயலாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.