மம்தா பானர்ஜி அரசை சட்டசபை தேர்தலில் தோற்கடிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாகவும், அது நடைபெறாத பட்சத்தில் அவரை கூலிப்படை மூலம் கொலை செய்ய பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சுப்ரதா முகர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் இடம்பெற்ற விழாவொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மம்தா பானர்ஜி அரசை சட்டசபை தேர்தலில் தோற்கடிக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. ஒருவேளை தோற்கடிக்க முடியாவிட்டால், மம்தா பானர்ஜியை கொலை செய்ய பா.ஜ.க சதித்திட்டம் தீட்டக்கூடும்.
கோடிக்கணக்கான மக்களுக்கு தாய் போல் இருக்கும் மம்தா பானர்ஜிக்கு ஏதேனும் தீங்கு விளைவிக்க முயன்றால் அதை தடுக்க நாங்கள் இரத்தம் சிந்தத்தயார்.
பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா வாகன அணிவகுப்பு மீது கல் வீச பா.ஜ.கவே ஆட்களை ஏற்பாடு செய்ததாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் தெரிவித்தார்.