30ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் முதற்கட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக கொள்வனவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன்,சமஷ்டி அரசாங்கமானது பொதுமக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், பைசர், பயோஎன்டெ;க் நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி மருந்துக்களை மத்திய அரசிடமிருந்து மாகாண அரசுகள் பெறுவதறக்கான உரிய வழிமுறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.