முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினை எதிர்த்து போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த போரட்டத்திற்கு மாவட்டத்தின் சகலப் பகுதிகளிலுமுள்ள, வர்த்தக சங்கங்கள், ஏனைய பொது அமைப்புக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கவேண்டுமெனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மைக்காலமாக முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய கடற்தொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
இது தொடர்பாக உரிய அதிகாரிகள், கடற்தொழில் அமைச்சு, கடற்படையினர் என பல்வேறு தரப்பினரிடமும் முறையிட்டிருந்த போதும், இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என்பது இந்த மீனவர்கள் குற்றச்சாட்டாக உள்ளது.