கொரோனா ஊரடங்கினால், தடை விதிக்கப்பட்ட மெரினா கடற்கரைக்கு 8 மாதங்களுக்கு பின்னர், நாளை முதல் பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.
முதல்வர் பழனிசாமி கடந்த மாதம் 30ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, 14ஆம் திகதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கமைய, 8 மாதங்களுக்கு பின்னர், சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் செல்வதற்கு நாளை முதல் அனுமதி அளிக்கப்பட உள்ளது.