தமிழகம், புதுச்சேரி, உள்ளிட்ட சில மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு, அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியுள்ளது.
இதற்கமைய, தமிழகம், மற்றும் புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு, பிரசர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மின்கல விளக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை
அதேவேளை, நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம், புதுச்சேரியில் விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.