பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் நோக்கங்களுக்காகவே அரசியல் கைதிகள் என பெயர் சூட்டப்படுகிறார்கள் எனத் அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதயகம்மன்பில தெரிவித்தார்.
சிறிலங்காவில் உள்ள சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் என எவரும் கிடையாது. இதனை அரசாங்கத்தின் அமைச்சரவை இணைப்பேச்சாளர் என்ற பதவியில் இருந்து உறுதியாக குறிப்பிடுகிறேன் என்றும் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இணையவழியூடாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அரசியல் கைதிகள் என எவரும் கிடையாது என்பதை பல முறை குறிப்பிட்டுள்ளோம். அரசாங்கத்தின் இணைப்பேச்சாளர் என்ற பதவியில் இருந்துகொண்டு திட்டவட்டமாக மீண்டும் குறிப்பிடுகிறேன் அரசியல் கைதிகள் என எவரும் கிடையாது. இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடு.
சிறைச்சாலையில் உள்ள கைதிகள் பால்நிலை மற்றும் குற்றச்செயற்பாடுகள் ஆகிய அடிப்படையில் வேறுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறைக்கைதிகள் தொடர்பில் நீதிமன்றமே தீர்மானம் எடுக்கும் அரசியல் காரணிகள் செயற்படுத்தப்படுத்தப்பட மாட்டாது என்று மேலும் தெரிவித்தார்.