அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கிய பிரமுகரும், பிரதி அமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் திருகோணமலையில் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 6.30 மணியளவில் கிண்ணியாவில் உள்ள வீட்டுக்கு சென்ற குற்றப் புலனாய்வு பிரிவினர், அப்துல்லா மஹ்ரூப்பை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
லங்கா சதொச நிறுவனத்தின் வாகனம் ஒன்றை கடந்த ஆட்சிக்காலத்தில், முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பாகவே, இவர் கைது செய்யப்பட்டு, கொழும்புக்கு கொண்டு செல்லப்படவுள்ளார் என்று கூறப்படுகிறது.
சதொச நிறுவனத்தின் முறைப்பாட்டை அடுத்தே, முன்னாள் அமைச்சர் மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், அவருடன் மாத்தளையைச் சேர்ந்த மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.