இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் அத்துமீறல்கள் மற்றும் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள இந்திய படையினர் தயார் நிலையில், உள்ளதாக முப்படைகளின் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது,கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் சீனப் படையினர் அத்துமீறலில் ஈடுபட்டதை அடுத்து நம் முப்படைகளும் வடக்கு எல்லையில் அதிதீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
நம் படைகளின் போர்க்குணமிக்க தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க இப்போது நேரம் வந்துவிட்டது. வடக்கு எல்லைப் பகுதியில் அத்துமீறல்கள் மற்றும் சவா லான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நம் படையினர் தயாராக உள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.