அமெரிக்க சட்ட மா அதிபர் வில்லியம் பார் (William Barr) நத்தாருக்கு முன்னர் தமது பதவியை இராஜினாமா செய்வாரென ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அவருடைய பதவி ஜனவரி 20 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு மோசடி இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் எவையும் இல்லையென அமெரிக்க சட்ட மா அதிபர் அறிவித்திருந்தார்.
வாக்கு மோசடி குற்றச்சாட்டுகள் ட்ரம்பினால் சுமத்தப்பட்டுவந்த நிலையில், அவரது இந்த அறிவிப்பு வெளியானது.
இதனையடுத்து இருவருக்குமிடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருந்தது.
தேர்தல் பிரசார காலப்பகுதியில், ஜோ பைடனின் மகன் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதை பகிரங்கப்படுத்தாமை தொடர்பில் அமெரிக்க சட்ட மா அதிபர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.