சிறிலங்கா விமானப் படையின் PT-6 வகை பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியிருந்த நிலையில் இதுகுறித்து ஆராய்வதற்கு விமானப் படையின் தளபதியால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சீனக்குடாவில் இருந்து இன்று காலை பயணத்தை மேற்கொண்டிருந்த குறித்த விமானம் கந்தளாயில் உள்ள சூரியபுர – ஜனரஞ்சன வாவியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், குறித்த விமானத்தில் சென்றிருந்த பயிற்சி பெறும் விமானி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே அவர் உயிரிழந்தநிலையில் இருந்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ருவென்வல்ல பகுதியைச் சேர்ந்த 23 வயதான விமானியே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.